நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு- டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர்.

போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
 
சம்பளப் பிரச்சினையால் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திலிருந்து நிக்கோல் 'எஸ்கேப்'

நடிகை நிக்கோல், சம்பளப் பிரச்சினை காரணமாக ஒரு நடிகையின் கதை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் கம்பி நீட்டி விட்டு புனே போய் விட்டாராம்.

அடடா என்ன அழகு, ஆறு மனமே, நாய்க்குட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிக்கோல். தற்போது சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.

இவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்தனர். இது போக, சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் ரூம், அவருக்கான சாப்பாட்டுச் செலவு உள்ளிட்டவற்றையும் தயாரிப்பாளரே ஏற்று செலவழித்து வந்தாராம். இருப்பினும் படப்பிடிப்பின்போது ஒத்துழைப்பு கொடுக்காமல் சிக்கலை ஏற்படுத்தினார் நிக்கோல் என்று கூறப்படுகிறது.

நெல்லூரில் படப்பிடிப்பை வைத்தபோது அங்கு வராமல் ஜகா வாங்கினாராம். கேட்டால் தோல் அலர்ஜியாக இருக்கிறது என்றாராம். அவருக்காக பலவற்றை பார்த்துப் பார்த்து செய்தும் ஒரு லட்சம் சம்பளத்தைக் கொடுத்து விட்ட நிலையில் மீதப் பணத்தையும் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம் நிக்கோல்.

அதில் ரூ. 25,000 பணத்துக்கான செக் தருவதாகவும், மீதப் பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் செட்டில் செய்வதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாம். இருப்பினும் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தற்போது திடீரென கிளம்பி புனே போய் விட்டாராம்.

இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்போவதாகவும், கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாகவும் ராஜ்கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் புகார்களை நிக்கோல் மறுத்துள்ளார். சம்பளம் தரவில்லை என்பதற்காகத்தான் நான் ஊருக்கு திரும்பி விட்டேன். மற்றபடி நான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. அவர்கள்தான் பல பிரச்சினைகளைக் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
 
குன்னூரில் சினிமா தயாரிப்பாளர் வெற்றிவேலன் மர்மசாவு- சாக்கடையில் பிணம்

குன்னூர்: குன்னூரில் குடிப்போதையில் சுற்றித் திரிந்த சினிமா தயாரிப்பாளர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன்(38). அவரது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 1 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. படுகர் இனத்தை சேர்ந்த வெற்றிவேலன், பார்த்திபன், சாமி உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சமீபகாலமாக 'ஹெச முங்காரு' என்ற படுகர் மொழி சினிமாவை வெற்றிவேலன் தயாரித்து வந்தார். மனைவி இறந்த பின் எப்போது போதையில் சுற்றி திரிந்த வெற்றிவேலன், இன்று காலை தூதுர்மட்டம் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அவர் இறந்து 3 நாட்களாகியதாக தெரிவித்தனர்.

வெற்றிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றிவேலன் தானாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட தர்ஷன்!

கன்னட நடிகர் தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து, நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது பிரச்சினையில் தேவையில்லாமல் நிகிதாவின் பெயரை இழுத்து விட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கன்னடத்தில் நடித்து வந்த நிகிதாவை மையமாக வைத்து சமீபத்தில் பெரும் புயல் கிளம்பியது. நடிகர் தர்ஷன், தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடும் சண்டையி்ல் இறங்கினார். மனைவியைத் தாக்கிய அவர் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. தர்ஷன், விஜயலட்சுமி இடையிலான மோதலுக்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நிகிதா இதை மறுத்தார்.

இந்த விவகாரத்தில்தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார். மேலும் நிகிதாவுக்கு கன்னட திரையுலகில் தடையும் விதித்தனர். பின்னர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிறகு கோர்ட்டில் தர்ஷனுக்கும், விஜயலட்சுமிக்கும் நீதிபதி அறிவுரை கூறினார். அதையடுத்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷன். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் தர்ஷன்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், தேவையில்லாமல் எங்களது பிரச்சினையில் நிகிதாவின் பெயர் இழுக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். இருப்பினும் நான் ஒருமுறை கூட நிகிதாதான் எனது பிரச்சினைக்குக் காரணம் என்று நான் கூறியதே இல்லை. போலீஸில் கொடுத்த புகாரிலும் கூட அதை கூறவில்லை. வேறு எந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.

எங்களது பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம். இதற்காக யார் மீதும் பழி போட நாங்கள் விரும்பவில்லை. நிகிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக நான் வருந்துகிறேன். அவரது வாழ்க்கை பெரும் சிக்கலாகி விட்டதற்காக நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு நடிக்க தடை விதித்தது குறித்து எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது என்றார்.

அதேபோல தர்ஷனும் நிகிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
 
காகா ரொம்ப 'ஸ்வீட்', சொல்கிறார் ஷாருக்கான்!!

முதன்முதலாக இந்தியாவுக்கு வந்த பாப் பாடகி லேடி காகாவை சந்தி்த்த நடிகர் ஷாருக்கான் காகா ரொம்ப ஸ்வீட் என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாப் பாடகியான லேடி காகா முதன் முதலாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் சந்தித்து பேசினார். ஷாருக்கானின் ரா ஒன் படத்தில் காகா நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்கமுடியாமல் போனது. ஷாருக் கான் காகாவை யுடிவியின் நிகழச்சி ஒன்றில் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காகா ரொம்ப ஸ்வீட். நானும், அவரும் சுமார் 2 மணி நேரம் பேசினோம். வாழ்வில் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி பேசினோம். அவர் ரொம்ப இனிமையானவர். என் மகள் சுஹானா(11) லேடி காகாவின் தீவிர ரசிகை. அவர் மூலம் தான் நானும் காகா ரசிகனானேன். காகாவின் இசையை என்னை கேட்க வைத்த எனது மகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஃபார்முலா 1 பந்தயம் பார்த்தீர்களே அது பற்றி கூறுங்கள் என்றதற்கு, அருமையாக ஒருங்கிணைத்திருந்தனர். இங்கு கார் பந்தயம் நடந்தது ஒரு சிறந்த விஷயம். அதற்காக நாம் எல்லாம் கொண்டாட வேண்டும் என்றார்.
 
மேடம் டுசாட்ஸில் அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடைய சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மொழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, கட்டியணைப்பது, முத்தமிடுவது வழக்கமாகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதிக முத்தங்கள் பெற்ற சிலைகள் பெயர் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு அதிக முத்தம் பெற்ற டாப் 10 சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டாப் 10 முத்தப் பட்டியலில் ஷாருக் கான் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிடுவதில் பெண்கள்தான் ஜாஸ்தி!

மெழுகுச் சிலைகளுக்கு முத்தம் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தானாம். அதாவது 80 சதவீதம் பேர். வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மேடம் டுசாட்ஸில் ஷாருக் கான்( 45), சல்மான் கான் (45) மற்றும் அமிதாப் பச்சன்(69) ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இதில் ரித்திக் ரோஷனுக்கு (37) தான் இளம் வயதிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டிலிருந்து சிலையாகியுள்ள ஒரு பிரபலங்களில் கரீனா கபூரும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.
 
அமிதாப் பச்சன் பாணி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய்?

நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் கூறுகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதே போன்று தமிழகத்தில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது. இதையடுத்து பல சேனல்களும் குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் அவை ஒரிஜினல் நிகழ்ச்சி அவ்வளவு பிரபலமாகவில்லை.

இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.

அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.
 
தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் என் விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி படமான லக் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சூர்யா ஜோடியாக அவர் நடித்த 7 ஆம் அறிவு தீபாவளிக்கு ரிலீஸானது. அதில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஸ்ருதி கமல் மகள் என்று நிரூபித்துவிட்டார் என்றெல்லாம் அவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் வருகின்றன.

தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்து வருகிறார். கையில் 2 தெலுங்கு படங்களும் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி தனது தந்தை கமல் பற்றி கூறியதாவது,

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் எந்த விஷயமானாலும் சரி நான் சுயமாக முடுவு எடுக்கிறேன். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். பண வசதி இருப்பதால் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை தெரிந்து வைத்துள்ளேன்.

நடிப்பு, இசை, எழுத்து ஆகிய 3 விஷயங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுகிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன். ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். எனக்கு நானே வழிகாட்டி. சில விஷயங்களில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பேன். ஆனால் நான் தான் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
 
காதலியை மணந்தார் பி.வாசு மகன்: ரஜினி, கமல், விஜயகாந்த், கருணாநிதி, வாழ்த்து

பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் ஷக்தி தன் நீண்ட நாள் காதலியான ஸ்மிருதியை இன்று மணந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பி. வாசுவின் மகன் பிரஷாந்த் (எ) ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரபு நாடே அசந்துபோகும் அழகியா நீ என்ற அவருடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

ஷக்தி சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த முரளி-துஷிதா தம்பதியின் மகளான ஸ்மிருதியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. வழக்கமான பெற்றோர்கள் போன்று விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்காமல் வாசுவும், முரளியும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டிவிட்டனர். முரளி பி. வாசுவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இன்று காலை இவர்கள் திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினிகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாகிய பின்னர் அவரும், கமல்ஹாசனும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி- கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார்

பிரபல நடிகை மனோரமா தலையில் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரி்த்தார். இதேபோல திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

பழம்பெரும் நடிகையான மனோரமா, சமீபத்தில் தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதனால் அவரது தலையில் அடிபட்டு விட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

அப்போது தலையில் ரத்தக் கசிவும், உறைவும் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அகற்ற நாளை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவர் கோமாவில் இல்லை என்றும் நல்ல நினைவுடன் நலமுடன் உள்ளதாக அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து மனோரமாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல நடிகை அனுஷ்காவும் நேரில் வந்து நலம் விசாரித்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்துள்ளனர்.

மனோரமாவின் உடல் நலம் குறித்து மகன் பூபதி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு நாள்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
 
ஆபாச நடிப்பு: 90 கசையடியில் இருந்து தப்பிய ஈரான் நடிகை- விடுவிக்கப்பட்டார்

டெஹ்ரான்: ஆபாசமாக நடித்ததற்காக 1 ஆண்டு சிறையும், 90 கசையடியும் விதிக்கப்பட்ட ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 90 கசையடியும் ரத்து செய்யப்பட்டது.

'மை டெஹ்ரான் ஃபார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.

இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த படத்தில் மர்ஜியா ஒரு காட்சியில் தலையில் துணியில்லாமலும், இன்னொரு காட்சியில் மது அருந்துவது போலவும் வந்ததற்காகத் தான் இந்த தண்டனை.

மர்ஜியாவின் ஓராண்டு தண்டனையை 3 மாதங்களாக குறைத்த நீதிமன்றம் கசையடியை ரத்து செய்தது. அதன்படி அவர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

'மை டெஹ்ரான் ஃபார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கமலின் 'ஷூ லேஸ்' டெக்னிக்!

உலக நாயகன் கமல் தன் தொப்பையைக் குறைக்க ஒரு 'டெக்னிக்' வைத்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 56 வயதாகிறது. ஆனால் இந்த வயதிலும் தொப்பையும், தொந்தியுமாக இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவர் மட்டும் எப்படி தொப்பை இல்லாமல் இருக்கிறார் ஒரு வேளை கடுமையான உடற்பயிற்சி செய்கிறாரோ என்று நினைக்கலாம்.

அதெல்லாம் இல்லை. தனக்கு தொப்பை வைத்துவிட்டதா இல்லையா என்பதை அறிய ஒரு படு சூப்பரான டெக்னிக் வைத்துள்ளாராம். இத்தனை வயதானாலும் ஷூ லேசை முட்டியை மடக்காமல் குனிந்து தான் கட்டுவாராம். அப்படி குனிந்து ஷூ லேசை மாட்ட சிரமமாக இருந்தாலோ அல்லது மூச்சு வாங்கினாலோ உடனே அடுத்த 2 நாட்களுக்கு பட்டினிதானாம்.

டயட்டில் இருந்து வயிற்றில் தேங்கிய தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து மறுபடியும் டிரிம்மாகி விடுவாராம். தொப்பையைக் குறைக்க ஒவ்வொருத்தரும் குண்டக்க மண்டக்க பாடுபாடுகின்றனர். உலக நாயகன் இப்படி ஒரு சூப்பரான டெக்னிக்கை கையாளுகிறார். பலேதான்..
 
சமந்தாவைக் 'கை கழுவிய' மணிரத்தினம்!

நடிகை சமந்தா ஒரே வருத்தத்தில் இருக்கிறாராம். காரணம் யார் தெரியுமா? இயக்குனர் மணிரத்னமாம்.

முதலில் டோலிவுட்டிலும், பிறகு கோலிவுட்டிலும் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா வேடத்தில் நடித்தவர் சமந்தா.

இந்தப் படத்துக்குப் பின்னர் தெலுங்கில் சமந்தா காட்டில் பெரும் மழை. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த தூக்குடு சமந்தாவை ஒரேயடியாகத் தூக்கிவிட்டு விட்டது. அதனால் இன்றைய தேதிக்கு தெலுங்கில் பெரிய நடிகை யார் என்றால் சமந்தா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். சம்பளத்தை கூட கோடி ரூபாயாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்..

தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சமந்தா. இந்த முறை, தமிழில் நடிக்கிறார் - நீ தானே என் பொன் வசந்தம் என்ற படத்தில். கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா இணைவது இது 2வது முறை. இந்நிலையில் கார்த்திக் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் மணிரத்னம் தனது படத்திற்கு சமந்தாவை நாயகியாக்க முயற்சித்துள்ளார். இதனால் சமந்தாவுக்கு ஒரே குஷி. ஆஹா, மணிரத்னம் படத்தில் நடிக்கப்போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தார்.

இடையில் என்னாச்சோ, ஏதாச்சோ தெரியவில்லை இல்லம்மா இந்த படத்திற்கு நீ வேண்டாம் என்று மணிரத்னம் கூறிவிட்டாராம். இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கைநழுவிவிட்டதே என்று அம்மணிக்கு ஒரே வருத்தமாம்.

மணி கைவிட்டா என்னா மேனன்தான் இருக்காரே, தொடர்ந்து 'ஆபர்' கொடுத்து சமந்தாவுக்குக் கை கொடுப்பார் என்று நம்பலாம்...!
 
எப்1 பார்ட்டியில் இன்று இரவு லேடி ககாவின் சிறப்பு நிகழ்ச்சி

இந்தியாவின் முதல் எப் 1 ரேஸ் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் அமெரிக்காவின், பிரபல பாப் பாடகி லேடி ககா நடத்தும் சிறப்பு இசை விருந்து இன்று இரவு டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க இந்திய ரசிகர்களுக்காகவே தான் சிறப்பு் பாடலைப் பாடப் போவதாக லேடி ககா உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற எப் 1 கார்ப் பந்தயம் இன்று இந்தியாவுக்குள்ளும் புகுந்தது. டெல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மைதானத்தில் இந்தியாவின் முதலாவது எப் 1 ரேஸ் இன்று வெற்றிகரமாக நடந்தது. இதில் ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் எப் 1 விருந்து நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. இதில் எப் 1 வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்க பாப் பாடகி லேடி ககா சிறப்பு இசை விருந்தினை அளிக்கிறார்.

கலக்கலாக டிரஸ் அணிவதில் பிரபலமானவர் ககா. ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் இந்திய உடையை அணிந்து அசத்தப் போகிறார். மேலும், இதுதான் அவர் இந்தியாவில் பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களும் உற்சாகமாக காத்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். டிக்கெட்டும் படு சூடாக விற்றுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்த ககாவுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் நமஸ்தே சொல்லி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். நேற்று டெல்லி ஹாட் பகுதியில் ஷாப்பிங் போனார். இன்று தனது இசை விருந்தால் ரசிகர்களை குளிர்விக்கவுள்ளார்.
 
ரேப் சீனுக்கு மட்டும் தான் கூப்பிடுறாங்க: ராக்கி சாவந்த் வருத்தம்

பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.
 
வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

விமல், இனியா நடித்து வெளியாகி ஓடி வரும் வாகை சூட வா படத்தில் மாற்றுத் திறனாளிகளை விமர்சனம் செய்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தென் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளைக் கண்டிக்காமல் நடித்த நடிகர் விமல், இயக்குநர் கே.பாக்கியராஜ் மற்றும் படத் தயாரிப்பாளர் முருகேசன், இயக்குநர் சற்குணம் ஆகியோருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

உடனடியாக இந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை?

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.

பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் நடந்த பட விழாவின்போது படு கவர்ச்சிகரமாக நடிகை ஒருவர் உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

மதுரை தியேட்டரில் மகன் தயாரித்த 7ஆம் அறிவு படம் பார்த்த ஸ்டாலின்

மதுரை: தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 7 ஆம் அறிவு படத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மதுரையில் உள்ள தமிழ் ஜெயா தியேட்டரி்ல் பார்த்து மகிழ்ந்தார்.

சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்தை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தனது மகன் தயாரித்த படத்தை பார்க்க ஆசைப்பட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

இந்த நிலையில், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை வந்த ஸ்டாலின் திமுக பிரமுகருக்கு சொந்தமான தமிழ் ஜெயா தியேட்டரில் 7 ஆம் அறிவு படத்தைப் பார்த்து ரசித்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு படம் பார்த்தார்.

படத்தை பார்த்துவிட்ட வெளியே வந்த ஸ்டாலின் கதை பற்றி முன்னாள் சபாநாயர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் விவாதித்தார்.

தேவர் நினைவிடத்தில் நடிகர்கள் அஞ்சலி

பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று தேவர் குருபூஜையையொட்டி தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி தினம் மற்றும் குருபூஜை இன்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சியினர், தேவர் இன அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பெரும் திரளானோர் காலை முதலே திரண்டு வந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சிங்கமுத்து, கருணாஸ் உள்ளிட்ட திரையுலகினரும் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்து தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்-கோமாவில் இல்லை என மகன் தகவல்

குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டுள்ள பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. அதேசமயம், அவர் கோமாவில் இல்லை என்று மனோரமாவின் மகன் பூபதி கூறியுள்ளார்.

மனோரமாவுக்கு ஏற்கனே முழங்கால் வலி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக அவர் கேரளா போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்படியும் வலி தீரவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வந்தார். படங்களில் நடிப்பதையும் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் 27ம் தேதி அவர் வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். அதில் அவருக்குத் தலையில் அடிபட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியதால் மனோரமாவின் ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் அதை மனோரமாவின் மகன் பூபதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மனோரமா கோமாவில் இல்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் ரத்தக்கசிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை அகற்ற செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றார் பூபதி.
 
எனது பலமே வேகம்தான், அது இருக்கும் வரை நடிப்பேன்- ரஜினிகாந்த்

சென்னை: எனது பலம், மூலம் வேகம்தான். நான் சிவாஜி போல, கமல் போல நடிப்பாற்றல் கொண்டவன் அல்ல. எனவே எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சங்கர ரத்னா விருது பெற்றுள்ளார். இதற்கான விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படு டிரி்ம்மாக, ஆரோக்கியமாக, உற்சாகமாக காணப்பட்டார். அவரைப் பார்த்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.

ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசும்போது எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் ஓய்வ பெற மாட்டேன் என்று கூறி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

ரஜினியின் பேச்சு:

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.

பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடுக்கத்தான் விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.

என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. அவர்களைப் போல என்னால் நடிக்கவும் முடியாது. நான் ஒரு ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும். சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா எனக்கு அரசியல் தந்தை. ஆகவே அவரை எனக்கு 70 ஆண்டுகளாக தெரியும். ஒரே நேரத்தில் ரஜினியையும், கமல்ஹாசனையும் இயக்கியவர். எஸ்.பி.முத்துராமனை பார்த்து உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
 
காஜலுக்கும் கல்தா... ஜூனியர் என்டிஆர் ஜோடியானார் த்ரிஷா!

தெலுங்கில் தயாராகும் தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது.

ஸ்ருதிஹாஸன் நடிப்பதாக இருந்த வேடம் இது. இந்திப் பட வாய்ப்பு கிடைத்ததால், ஜூனியர் என்டிஆருடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ருதி.

எனவே உடனடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இப்போது தம்மு படத்தின் நாயகி வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது. இது ஜூனியர் என்டிஆரின் வழக்கமான பொழுதுபோக்குப் படம் என்பதால், இன்னும் ஒரு ஹீரோயின் தேவைப்பட, அதற்கு கோ மூலம் பிரபலமான கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரிஷாவைப் பொறுத்தவரை இது அவருக்கு மிகப் பெரிய பிரேக் ஆக பார்க்கப்படுகிறது. கல்யாணம், ஓய்வு என்றெல்லாம் பேசப்பட்டு வந்த அவர், இப்போது மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளது திரையுலகில் ஆச்சர்யத்தையும், போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளதாம்!
 
வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்

எஸ். ஷங்கர்

நடிப்பு: விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி, சந்தானம்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: ப்ரியன்
கதை, திரைக்கதை, இயக்கம்: எம் ராஜா
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்
மக்கள் தொடர்பு: ஜான்சன்

மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.

ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!

கதை?

பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).

ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!

ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்... நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, 'அது நீங்கதான்' என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!

ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை... இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை 'முன்னே' பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!

தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!

விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!

இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!
 
நடிகை அஞ்சலியை மிரட்டுவதா? - கரண் கண்டனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் நடித்ததற்காக நடிகை அஞ்சலியை மிரட்டுவதா என கண்டித்துள்ளார் நடிகர் கரண்.

நடிகர் கரண்-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். விசி வடிவுடையான் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தமிழ் நாடு லயன் பால் அசோசியேஷன் அமைப்பு படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கரண் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "குமரி மாவட்டம் கேரள எல்லையில் வாழ்ந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் வாழ்க்கையை படமாக்கி உள்ளோம். நான் வெட்டோத்தி சுந்தரமாக நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பிலேயே சிலர் கலாட்டா செய்தனர். அஞ்சலியை தாக்க முயற்சியும் நடந்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த படம் குமரி மாவட்டங்களின் பெருமையை சொல்லும். எவ்வித அவதூறான காட்சிகளும் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

வருகிற 10-ந்தேதி படத்தை வெளியிட உள்ளோம். இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, போராட்டம் நடத்துவது என சிலர் ஈடுபட்டுள்ளனர். எங்களை மிரட்டுகிறார்கள். படத்தில் யாரையும் புண் படுத்தவில்லை. திட்ட மிட்டபடி படம் வெளியாகும்," என்றார்.

"இந்தப் படம் குமரி மக்களையும் மண்ணையும் அடையாளப்படுத்தும் படமாக இருக்கும். தவறாக எதையும் சித்தரிக்கவில்லை," என்றார் உடனிருந்த இயக்குநர் வடிவுடையான்.
 
சில்வஸ்டர் ஸ்டலோன் படப்பிடிப்பில் விபத்து - ஸ்டன்ட் நடிகர் பலி!

சோபியா: பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோனின் 'எக்ஸ்பேண்டபிள்ஸ் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் அவரது ஸ்டன்ட் நடிகர் மரணமடைந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், இப்போது 'தி எக்ஸ்பேண்டபிள்ஸ்-2' என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படகு சண்டை காட்சி அங்குள்ள ஆக்னியானோவ் அணையில் படமாக்கினர். காட்சிப்படி படகுகள் போலி குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

அதில் ஒரு குண்டு பயங்கரமாக வெடித்ததில் படகு விபத்துக்குள்ளானது. இதில், ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அதே இடத்தில் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். உடனே, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து நடைபெறும் போது நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டலோன் அங்கு இல்லை. வேறு ஒரு இடத்தில் நடந்த படப்பிடிப்பில் இருந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
 
தொடரும் மோதல்.... ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு சிம்பு தடை!

நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றிவிட்டது. இதன் விளைவாக, தனக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடிக்கும் ரிச்சா, ஜீவாவுடன் நடிகக் கூடாது என தடை விதித்துள்ளார் சிம்பு.

'கோ' படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதையில் சிம்புவின் தலையீடு இருந்ததால், அந்த வாய்ப்பை ஜீவாவுக்குக் கொடுத்தார் கேவி ஆனந்த்.

கோ சூப்பர் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.

தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுஷுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த 'வாமணன்' படத்தை இயக்கியவர்.

ஜீவா ஜோடி என்பதால் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ரிச்சா. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றும் உறுதியாக சொன்னாரம்.

அதை நம்பி பட வேலைகளை இயக்குநர் அகமது தொடங்கிய நிலையில், திடீரென அகமதுவுக்கு போன் செய்த ரிச்சா, ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். முதலில் சந்தோஷமாக கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போனார்.

இப்போது ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் ரிச்சா. சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவைத் தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜீவா படத்துக்குப் பதில் வேறு வாய்ப்பு தருவதாகவும் சிம்பு உறுதியளித்துள்ளாராம். எனவே ரிச்சா ஜீவாவை உதறியதாகச் சொல்கிறார்கள்.
 
வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்ட ரஜினி!

உடல்நிலை சரியான பிறகு மூன்று மாதங்கள் ஓய்வெடுத்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் சகஜமாகப் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார்.

உடல்நிலை சரியான பிறகு, ரஜினியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

அப்படியும், தனது ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் தினசரி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி.

அடுத்து வெளியில் செல்லத் தொடங்கியுள்ளார். முன்பு மும்பைக்கு ஷூட்டிங் போனவர், அடுத்து தெரிந்த நண்பர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.

பொதுவாக எந்தப் புதிய படம் வெளியானாலும் ரஜினி அதைப் பார்த்து பாராட்ட வேண்டும் என திரையுலகினர் எதிர்ப்பார்ப்பது வழக்கம். அவரும் அதைத் தவறாமல் செய்து, இளைஞர்களை ஊக்குவித்துவந்தார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது நின்று போனது. தனது சிஷ்யன் அஜீத்தின் படத்தையே அவர் தன் வீட்டில்தான் பார்த்தார்.

இப்போது அவர் பழையபடி சுறுசுறுப்பாக, இயல்பாக உள்ளதால் மீண்டும் வெளியில் வந்து படம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

அப்படி அவர் பார்த்துள்ள முதல்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ஏழாம் அறிவு. சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் அவர் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தார். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்.

ரஜினியை வரவேற்க படத்தின் ஹீரோ சூர்யாவும் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.

படம் பார்த்து முடித்த ரஜினி, 'எக்ஸலென்ட்' என்று பாராட்டினார். முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர் கடுமையாக உழைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரை சூர்யாவும் ஜோதிகாவும் வழியனுப்பி வைத்தனர்.
 
எம்ஜிஆர் - ரஜினி பாணியில் 'வேலாயுதம்'! - விஜய்

எம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...

ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.

அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.

உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.

தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.

நெட்டில் விடாதீங்க...

மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.

இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.

இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.
 
தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா மரணம்

ஹைதராபாத்: பிரபல இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவின் மனைவி தாசரி பத்மா நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

கடந்த 25-ந் தேதி அவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசமும், தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

கணவர் தாசரி நாராயணராவ் மற்றும் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

தாசரி பத்மா, திரைப்பட தொழிற்சங்கங்களில் தலைவியாகவும், பட அதிபராகவும் இருந்தார். கணவர் தாசரி நாராயணராவ் இயக்கிய செய்த பல படங்களை அவரே தயாரித்தார். அவர் தயாரித்த 'தாரக பிரபு' என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிவரஞ்சனி, மேகசந்தேசம், மஞ்சு, ஒசே ராமுலம்மா, கொண்டவீட்டி சிம்மாசனம் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களை அவர் தயாரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் திகழ்ந்தவர் தாசரி பத்மா.

அவருடைய மறைவு தெலுங்கு பட உலகை அதிர்ச்சி அடைய செய்தது. தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொட்சா சத்யநாராயணா ஆகியோர் தாசரி பத்மாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் தாசரி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
 
ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து '3' படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.
 
கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்றதை தட்டி கேட்ட வாலிபர் கொலை

கோவை: திரையரங்கில் சினிமா டிக்கெட் அதிக விலைக்கு விற்றதை தட்டிக் கேட்ட வாலிபரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது. இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்து பலியானார்.

கோவை வேலாண்டிபாளையம் அடுத்த இடையார்பாளையத்தில் உள்ள கிருத்திகா திரையரங்கில், தீபாவளிக்கு வெளியான 'ஏழாம் அறிவு' படம் திரையிடப்பட்டது. புது படத்தை பார்க்க வேலாண்டிபாளையத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரான ரமேஷ்(24) தனது நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அப்போது அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிருப்தியடைந்த ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டை கிழித்தெறித்து திரையரங்கை விட்டு வெளியேறினார்.

வழியில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ரமேஷ்-க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுல்ராஜ், லோகேஷ், சரவணன் ஆகியோர் தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திரையரங்கு உரிமையாளரின் உறவினர் பரணிக்குமார்(27), கிஷோர்(26), ரமேஷ்(26), சுரேஷ்(27), டொமினிக்(26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
 
என்ன, 7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?

நடிகர் சூர்யா, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதி நடித்துள்ள 7 ஆம் அறிவு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சூர்யா புத்த துறவியாக நடித்துள்ளார். ஒரு நாட்டை 9 நாடுகள் சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

அந்த வசனத்தையும், தமிழரான போதிதர்மரை புத்தருக்கு இணையாக பேசப்படும் காட்சிகளையும் பார்த்து சிங்களவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனராம். தமிழரான போதிதர்மருக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவது எல்லாம் இந்த படத்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தக் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் குரல் எழுப்பி வருவதால் அந்தப் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்குப் பிடிக்காத காட்சிகளை நீக்கிய பின் திரையிட அனுமதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 7 ஆம் அறிவு யாழ்ப்பாணத்தில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
 
7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

-எஸ்.ஷங்கர்

நடிப்பு: சூர்யா, ஸ்ருதி ஹாஸன், ஜானி ட்ரை நூயென்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ: ஜான்சன்

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!
 
கார் விபத்து வழக்கு: இப்படி போய் இப்படி வந்த டிவி நடிகர்

இந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரோனித் ராய் தாறுமாறாக கார் ஓட்டி இன்னொரு காரை இடித்தது தள்ளிவிட்டு தப்பியோடிவிட்ட வழக்கில் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை செலுத்துமாறு கூறி அவருக்கு பந்த்ரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தி சீரியல்களில் நடிப்பவர் ரோனித் ராய். கியூன்கி சாஸ் பி கபி பஹு தி, பந்தினி மற்றும் அதாலத் போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மும்பையின் அம்போலி பகுதியில் தனது மெர்சிடீஸ் காரில் வேகமாக சென்று இன்னொரு காரை இடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் 56 வயது பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் ரோனித் ராயை கைது செய்தனர். அவரை மும்பையில் உள்ள பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பந்த்ரா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது அதுவும் வெறும் ரூ. 12,000 பிணயத் தொகை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளது.

அதிகாலையில் விபத்து ஏற்படுத்தி காலையில் கைதாகி சிறிது நேரத்தில் இப்படி போய் இப்படி வெளியே வந்துவிட்டார்.
 
மார்க்கெட் இருந்தா ஒரு கோடி... இல்லேன்னா கடைகோடி! - இலியானா தத்துவம்

பிரபல நடிகைகளுக்கு ஒரு படம் நன்றாக ஓடினால் போதும், சம்பளம் கோடிகளில் உயர்த்தப்பட்டுவிடும்.

பல நேரங்களில் தயாரிப்பாளரே விரும்பி தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் சமாச்சாரம் இது.

சில நேரங்களில் நடிகைகள் எப்படா நேரம் வரும் என்று காத்திருந்து உயர்த்திவிடுவார்கள்.

நடிகை இலியானா இந்த இரண்டு வகையிலுமே சேர்த்திதான்!

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ள அவர், இப்போது தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பெரிய ஹிட் எதுவும் கொடுக்காத இலியானாவுக்கு இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்பட்டது.

இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது, "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிக்கிறேன். நான் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். நானாகப் போய் எனக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை.

எனது மார்க்கெட் நிலவரம் பார்த்து சம்பளத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். என் படங்கள் நன்றாக ஓடும்போது அதற்கேற்றவாறு சம்பளம் வாங்குவதில் தவறு இல்லை.

தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடினால் நிறைய சம்பளம் கேட்கிறேன் என்கிறார்கள். சம்பளத்தை குறைத்தால், படங்கள் தோற்றதால் குறைத்து விட்டார் என்கிறார்கள்.

சினிமாவில் யாரும் சம்பளத்தை சும்மா தருவதில்லை. மார்க்கெட் இருந்தால் இங்கே சம்பளம் கோடிகளில் இருக்கும். ஓடாவிட்டால் கடைகோடியில் நிறுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியும்!", என்றார்.
 
முதல் நாளில் மிஸ் ஆனாலும் 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!

ஷாரூக் கானின் ரா ஒன் திரைப்படம் முதல் நாளில் ரூ 18.25 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இது சல்மான் கானின் பாடி கார்ட் படம் வசூலித்த ரூ 21 கோடியை விட குறைவுதான்.

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ரா ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், முதல் நாளில் ரூ 18.25 கோடியை மட்டுமே அந்ப் படம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால், இரண்டாம் நாளில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.25 கோடியை குவித்துள்ளது ரா ஒன். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை என்று இதனை பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.140 கோடியில் தயாரான சயின்ஸ் பிக்ஷன் படம் ரா ஒன். ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்ஹா இயக்கியிருந்தார்.

ரஜினிகாந்த் ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வந்து கைத்தட்டல்களை அள்ளினார்.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் இந்தியால் ரூ.15 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.3.25 கோடியாகவும் இருந்தது. முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்து, பாடிகார்ட் படத்தின் ரூ.21 கோடி சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நடக்காமல் போனது.

ஆனால் இரண்டாவது நாள் இந்தப் படம் வட்டியும் முதலுமாக சேர்த்து ரூ.25 கோடியை வசூலித்து ஷாரூக் கானுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

'ரா ஒன்னை தீபாவளி அன்றே வெளியிட்டது தவறாகப் போய்விட்டது. காரணம், மக்கள் அனைவரும் தீபாவளியன்று திரையரங்கில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த நல்ல நாளில் வீட்டில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அதனால்தான் வசூல் குறைந்தது. இல்லாவிட்டால் முதல் நாளில் ரூ.25 கோடியை எட்டியிருக்கும்,' என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான கோமல் நஹாதா.

எந்த இந்திப் படத்துக்கும் இல்லாத அளவு பெரிய ஓபனிங் தமிழகத்தில் கிடைத்துள்ளது ரா ஒன்னுக்கு. முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படம். காரணம்... சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஒன் அன்ட் ஒன்லி ரஜினி தான்!

பல நகரங்களில் ரஜினி ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட் வைத்து, முதல் நாள் முதல் காட்சியை மேள தாளத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

ஷாரூக்கானின் பிஸினஸ் உத்திக்கு கிடைத்த அபார வெற்றி இது!
 
ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! - மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!!

ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.

லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.
 
ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!

தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...
 
ரஜினியுடன் '6லிருந்து 60 வரை' படத்தில் நடித்த எல்ஐசி நரசிம்மன் மரணம்!

சென்னை: பிரபல நடிகர் எல்ஐசி நரசிம்மன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.

பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
 
வைரமுத்துவுக்கு உள்ளான் கறி விருந்து வைத்த கமல்!

கமலும் வைரமுத்துவும் இணைவது புதிதல்ல... முதல் முறையும் அல்ல. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் கமல் அவருக்கு தரும் ட்ரீட்தான் சம்திங் ஸ்பெஷல்.

பிரேஸிலிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெஷல் காபி, ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்படும் பழங்கள்... இப்படி ஒவ்வொரு சந்திப்பும் வைரமுத்துவுக்கு ருசி மிக்கதாக அமைந்து விடுமாம். இதை வைரமுத்துவே பல சந்திப்புகளில் கூறியுள்ளார்.

இந்த முறை தீபாவளிக்கு அடுத்த நாள் சந்தித்தார்கள், விஸ்வரூபம் படத்துக்காக.

இந்த சந்திப்பின்போது, கமல் வைரமுத்துவுக்கு வைத்த விருந்து என்ன தெரியுமா... உள்ளான் கறி!

பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளான் பறவைகள் அதிகம் கிடைக்கும். இவற்றை வாங்கி விருந்து சமைத்திருக்கிறார்கள் நேற்று.

வைரமுத்துவை படப்பிடிப்புத் தளத்துக்கே வரவழைத்த கமல், அவருக்கு உள்ளான் கறி விருந்தளிக்க, வைரமுத்து தனது கள்ளிக்காட்டு நினைவுகளில் மூழ்கிப் போய் ரசித்து ருசித்து சாப்பிட்டாராம்!

அதன் பின்னர் இருவரும் பல மணி நேரங்கள் மேல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விஸ்வரூபத்துக்காக தான் இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன்.

40 நிமிடம் ஓடிய காட்சிகளைப் பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து.

படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார்.

உங்களுக்கில்லாத உரிமையா கவிஞரே?

"சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

"உங்களுக்கு இல்லாத உரிமையா கவிஞரே? எடுத்துக்கொள்ளுங்கள்'' என்றார், கமல்ஹாசன்!
 
தனது மெழுகுச் சிலையை தானே திறந்து வைத்த அழகுச் சிலை கரீனா!

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது மெழுகுச் சிலையை இங்கலாந்தின் பிளாக்பூலில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார்.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை கரீனா தன் கையாலே திறந்து வைத்து, அந்த சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்து கரீனா கூறியதாவது,

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச் சிலை உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த சிலை அப்படியே என்னைப் போன்று உள்ளது. அவர்கள் மிகவும் அழகாக செய்துள்ளனர். நான் எது, சிலை எது என்று சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரூ.1,1, 896, 956 செலவு செய்து கரீனாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர். அந்த சிலையை செய்து முடிக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது.

அங்கு ஏற்கனவே ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ரித்திக் ரோஷன் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகள் உலகில் உள்ள 6 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

அழகுச் சிலை தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்துள்ளது...
 
ரா.ஒன் முதல் நாள் வசூல் ரூ. 22 கோடி..ரெக்கார்ட் பிரேக்!

இந்தியா முழுவதும் 3,200 தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஷாருக் கானின் ரா.ஒன் முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வசூலித்து ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.

படத்தின் இந்திப் பதிப்பு ரூ. 20 கோடியை ஈட்ட, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகள் தலா ரூ. 1 கோடியை ஈட்டியுள்ளன.

ரூ. 145 கோடியில் ஷாருக் தயாரித்துள்ள இந்தப் படம் நாட்டின் பெரும்பான்மையான மல்டி பிளக்ஸ்களில் 20 சதவீதம் அதிகமான டிக்கெட் விலையுடன் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் பாடிகார்ட் நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது. இது தான் இதுவரை இந்திப் படத்தின் ரெக்கார்ட் பிரேக்காக இருந்தது. இதை முறியடித்துள்ளது ரா.ஒன் என்கிறார்கள்.

பாடிகார்ட் ரிலீசான முதல் 5 நாட்களில் ரூ. 80 கோடியை ஈட்டியது. ரா.ஒன் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
 
அனுஷ்காவை அடுத்து சமந்தாவுக்கு அடிபோடும் கோலிவுட்

நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குப் படமான தூக்குடு ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி ரோலில் நடித்தாலும் யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தவர். அடுத்ததாக அவர் முரளி மகன் அதர்வாவுடன் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சமந்தாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதையடு்தது அவர் தெலுங்கு பக்கம் போய் பார்க்கலாம் என்று ஹைதராபாத் கிளம்பினார். அவர் அங்கு போன நேரம் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. அதிலும் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்த தூக்குடு சமந்தாவை தூக்கிவி்ட்டுள்ளது. இந்த படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தாவை கண்டும், காணாததுமாய் இருந்த கோலிவுட் தற்போது தூக்குடு ஹிட்டானவுடன் அவருக்கு குறிவைத்துள்ளது. இதுவரை சமந்தாவை சீண்டாத பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் ரெண்டு படத்தில் அறிமுகமானார். வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் போய் பெரிய நடிகை ஆனார். தற்போது அவருடன் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 
குளியலைறையில் வழுக்கி விழுந்து தலையில் அடி: மருத்துவமனையில் மனோரமா

நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோரமா முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்ட பிறகும் வலி குறையாததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை தரப்பட்டது.

இதையடுத்து அவர் படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
வேலாயுதம்.. படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே!

சூர்யாவின் ஏழாம் அறிவு விமர்சனத்தை வெளியிட்டு விட்டோம். அடுத்ததாக இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் பட விமர்சனம் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படமும் 'வழக்கமான விஜய் படம்' தான் என்ற விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதே நேரத்தில், ஒரு சாதாரண கதையை, தன் பாணியில் மசாலா சேர்த்து சுவாரஸ்யப்படுத்திவிட்டார் ரீமேக் ஸ்பெஷல் இயக்குநர் ராஜா என்றும், கலகலப்பான விஜய்யின் மாஸ் என்டர்டெயினர் என்றும் ஒரு பேச்சிருக்கிறது.

வேலாயுதம் வசூலில் புதிய சாதனை படைக்குமா... விஜய்யை பழைய 'வசூல் ராஜாவாக' பாக்ஸ் ஆபீஸில் நிலைநிறுத்துமா? என்ற கேள்வி கோடம்பாக்கம் பண்டிதர்கள் மத்தில் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே... நீங்க சொல்றதை விஜய்யும் படிப்பார்!