ரூ.7 கோடி சம்பளம் கேட்கும் வித்யாபாலன்: தயாரிப்பாளர் அதிர்ச்சி!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்ததால் கவர்ச்சி காட்ட வித்யா பாலனுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும், கவர்ச்சி வேடங்களை தவிர்த்தும் வந்தார். இந்நிலையில், சில்க் ஸ்மிதா கதையாக உருவான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடிக்க கேட்டபோது ஒப்புக்கொண்டார். படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓவர் கவர்ச்சியாக இவர் நடித்ததை எதிர்த்து ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 'தி டர்ட்டி பிக்சர்' படம் வெளியாகி ஹிட்டானதையடுத்து பாலிவுட் தயாரிப்பாளர்கள் வித்யா பாலன் கால்ஷீட் கேட்டு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தி இருக்கிறார் வித்யா பாலன். இந்தியில் இவ்வளவு பெரிய சம்பளத்தை ஒரே படம் ஹிட்டானதும் யாரும் கேட்டதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

Post a Comment