காதலன் ரிதேஷ்முக்கிற்கு நடிகை ஜெனிலியா பார்ட்டி கொடுத்தார். ரகசியமாக காதலித்து வந்த ஜெனிலியாவும், பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் சமீபத்தில் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தனர். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ஜெனிலியா படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ரிதேஷ் முக்கிற்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையடுத்து அவருக்கு பிறந்தநாள் ஆச்சரியம் கொடுக்க ஜெனிலியா முடிவு செய்தார். ரகசியமாக மும்பை ஸ்டார் ஓட்டல் ஒன்றில் விழா ஏற்பாடு செய்தார். தனது நெருங்கிய நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். பின்னர் காதலன் ரிதேஷுக்கு போன் செய்து நட்சத்திர ஓட்டலில் சந்திக்க காத்திருப்பதாக கூறி வரவழைத்தார். அவர் புறப்பட்டு வந்தபிறகுதான் அங்கு பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தது தெரிந்தது. சந்தோஷமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். தம்பதிகளாவதற்கு முன்பாக காதல் ஜோடிகளாக கடைசி பிறந்தநாளாக இது அமைந்ததில் இருவருமே கட்டிப்பிடித்து பரஸ்பரம் மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர்.
Post a Comment