நடிகரானதால் இசைக்கு முழுக்கா? : விஜய் ஆண்டனி பதில்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகரானாலும் இசை அமைப்பதை நிறுத்தமாட்டேன் என்று இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: 'வேலாயுதம்', 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தேன். இந்நிலையில் 'நான்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்றேன். 'நடிகரானதால் இசைக்கு முழுக்குதானா?' என்று கேட்கிறார்கள். படம் வெற்றி அடைந்தாலும் இசை அமைப்பதை விடமாட்டேன். அதுதான் என் தொழில். ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடம் காத்திருந்தேன். என்னை போல நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அவர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். என் படங்களில் இதுவரை 42 பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். திறமையான பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக 'நான்' படத்துக்காக ஒரு போட்டி வைத்திருக்கிறேன். பாடல் எழுதி என் இமெயிலுக்கு அனுப்புபவர்களில் சிறந்த பாடலாசிரியரை தேர்வு செய்து இந்த படத்தில் அறிமுகப்படுத்துவேன். இவ்வாறு விஜய்
ஆன்டனி கூறினார்.


 

Post a Comment