-நடிகை மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
1/3/2011 2:23:11 PM
1/3/2011 2:23:11 PM
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மீனா கடந்த 28 ஆண்டுகளில் 175 படங்களில் நடித்துள்ளார். மீனாவுக்கும், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் வித்யாசாகருக்கும் கடந்த 2009, ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு சினிமாவிலும், டிவியிலும் நடிப்பதை குறைத்துக்கொண்ட மீனா, தன் கணவருடன் பெங்களூரில் குடியேறினார். தற்போது நரேன் அக்காவாக 'தம்பிக்கோட்டை' படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது.
மீனா நிறைமாத கர்ப்பமாக இருந்ததால், சைதாப்பேட்டையிலுள்ள தன் அம்மா வீட்டில் தங்கினார். இந்நிலையில், அவருக்கு டிசம்பர் 31ந் தேதி இரவு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீனாவை அனுமதித்தனர். அவருக்கு ஜனவரி 1ந் தேதி காலை 11.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. Source: Dinakaran
Post a Comment