ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலருக்கு விலை போன "பில்லா 2" போஸ்டர்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் 'பில்லா 2'. அல்டிமேட் ஸ்டார் 'தல' அஜீத் நடிப்பில் 'பில்லா' வசூலில் பட்டையைக் கிளிப்பியதோடு... தல அஜீத்துக்கு ஒரு பிரேக்கை ஏற்படுத்தி தந்தது. இப்போது பில்லா 2 படுவேகத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக நம்ம தல அஜீத் பல கிலோ எடைகளை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என இயக்குனர் சக்ரி தெரிவித்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகும் போது, தல ரசிகர்கள் உட்பட சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி தான் போல...பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அ‌‌ஜீத். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயா‌ரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

பில்லா 2 படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை? மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள். ர‌ஜினி, கமல் படங்கள்தான் இவ்வளவு பெ‌ரிய தொகைக்கு விலை போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியமானது.


 

Post a Comment