கோலிவுட்டில் நம்பர் 1 நடிகை என அந்தஸத்துடன் பாலிவுட் சென்ற அசினுக்கு திடீர் சின்னத்திரை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கரீனா, கேத்ரீனா, பிரியங்கா, தீபிகா என அசினுக்கு பாலிவுட்டில் கடும் போட்டி நிலவுகிறது. பாலிவுட்டில் கஜினி தவிர எந்த ஒரு படமும் பெயர் சொல்லும் அளவுக்கு ஓடவில்லை. இதனால் சின்னத்திரைக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் அசின். விரைவில் சூப்பர் ஸ்டார் சாண்டா என்ற நிகழ்ச்சியில் அசின் நடிக்கவுள்ளார். சின்னத்திரைக்கு வந்தது பற்றி அசின் கூறுகையில், யு.டி.வி.யின் சூப்பர் சாண்டா நிகழ்ச்சியில் நடிக்கிறேன். பெரிய திரையை காட்டிலும், சின்னத்திரை மூலமாக நேரடியாக ரசிகர்களை சென்றடையலாம். இது ஒரு அருமையான நிகழ்ச்சி, நட்பை விளக்கும் உண்ணதமான நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.
Post a Comment