சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தில் அவர் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க அசின், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது இந்தி நடிகை கேத்ரினா கைஃப் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு தேதி சிக்கல் வந்ததில்லை. ராணாவில் தொடங்கியது பிரச்சனை. ரஜினியின் உடல்நலக் குறைவால் ராணா படம் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு இரண்டு மூன்றுமுறை படப்பிடிப்பு தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். அத்தனையும் அறிவிப்போடு நின்றது.
இந்நிலையில்தான் கோச்சடையான் அறிவிப்பு வெளியானது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா இயக்க, கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வையை ரவிக்குமார் கவனிக்கிறார். கோச்சடையானின் படப்பிடிப்பு பிப்ரவரி -15 ஆம் தேதி தொடங்கும் என அவர் அறிவித்துள்ளது ரஜினி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.

Post a Comment