ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்' படத்தின் பிசினஸ் சூடுபிடித்துவிட்டது. விரைவில் ஷூட்டிங் தொடங்கயிருக்கும் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கோச்சடையானின் தெலுங்கு டப்பிங் உரிமைக்கு 28 கோடிகள் தர தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சில மாஸ் ஹீரோக்களின் படங்களின் மொத்த கலெக்சன்தான் இது. இதேபோல் படத்தின் கேரள மற்றும் வெளிநாட்டு உரிமைக்கும் இப்போதே அடித்துக் கொள்ள தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும் படம் முடியும் வரை நோ பிசினஸ் என்று தீர்மானித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின்.
Post a Comment