பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் தமன்னா. தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. தமிழில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கில் பிரபல ஹீரோ மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். 'தூக்குடு' வெற்றி படத்தை தயாரித்த அனில் இப்படத்தை தயாரிக்கிறார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து தமன்னா நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார்.
இது குறித்து அனில் கூறும்போது, "தமன்னா வுக்கு கால்ஷீட் பிரச்னை உள்ளது. எனவே வேறு முன்னணி நடிகையை ஹீரோயினாக்க பேசி வருகிறேன். விரைவில் முடிவாகிவிடும்" என்றார். சமீபகாலமாகவே தமன்னா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் இப்படி ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது. தமிழ் படங்களில் நடிக்க கேட்டு சிலர் சென்றபோதும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தமிழில் நல்ல கதை வந்தால் நடிப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்திலிருந்தும் அவர் விலகி இருப்பது திரையுலகில் பலவித கேள்விகளை எழுப்பி உள்ளது.

Post a Comment