கார்த்தி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதற்கு பதில் கூறினார் லட்சுமிராய். தாம் தூம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா என அடுத்தடுத்து தமிழில் நடித்துவந்த லட்சுமிராய்க்கு இப்போது சொல்லும்படி தமிழில் படம் இல்லை. மலையாளத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: நடிக்க கேட்டு வந்த எல்லா படங்களையும் முன்பு ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அந்த பாணியை மாற்றிக்கொண்டேன். வரும் எல்லா படங்களிலும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. நல்ல வேடம் என்றால் மட்டுமே தேர்வு செய்து ஒப்புக்கொள்கிறேன். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என் கேரக்டரை கேட்டபோது பிடிக்கவில்லை. அதில் நடிப்பதைவிட சும்மா இருப்பதே மேல் என்று நடிக்க மறுத்துவிட்டேன். இப்போதைக்கு கடினமான பாதையை கடந்துகொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஜீவா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. இப்போதைக்கு மலையாளத்தில் 3 படம், கன்னடத்தில் 2 படம், தெலுங்கில் ஒரு படம் என 6 படங்களில் நடித்து வருகிறேன். நான் கடவுளையும், கடின உழைப்பையும் நம்புகிறேன். எந்த வேடத்தை ஏற்றுக்கொண்டாலும் அதை ஒரு தேர்வுபோல எண்ணி நடிக்கிறேன். எது வந்தாலும தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. நல்ல படத்துக்காக காத்திருக்க தயாராகிவிட்டேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.
Post a Comment