ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியல

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியாதது வருத்தமாக இருக்கிறது என்றார் சமந்தா. மணிரத்னம் இயக்கும் 'கடல்', கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படங்களில் நடிக்கும் சமந்தா கூறியதாவது: 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'மாஸ்கோவின் காவேரி' படங்களில் நடித்தேன். இதையடுத்து மணிரத்னம் படத்திலும், மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்கிறேன். தமிழில் 2 படங்களில் நடித்திருந்தாலும் என்னை ரசிகர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. என் நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்லும்போது என்னை ரசிகர்கள் சூழ்ந்துகொள்வதில்லை. ஆட்டோகிராப் கூட கேட்பதில்லை. இது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பெரிய நடிகையாக உயர்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியும் பயமும் இருந்தது. ஒப்பந்தம் ஆனது முதல் எப்போது அவரது ஷூட்டிங்கில் பங்கேற்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். தற்போது திரையுலக ஸ்டிரைக்கால் ஷூட்டிங் நடக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 3 மொழிகளில் உருவாகும் இதில் நடிப்பது சவாலாக இருந்தது. இவ்வாறு சமந்தா கூறினார்.


 

Post a Comment