பிரகாஷ்ராஜுக்கும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. 'பயணம்' என்ற படத்தை தெலுங்கில் இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். அடுத்து 'சீதம்மா வகிட்லோ சிருமல்லே செட்டு' என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார் ராஜு. இதில் வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன், தம்பியாக நடிக்கின்றனர். இரு ஹீரோக்களின் தந்தை வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்புக்கொண்டார். கடந்த மாதம் இறுதியில் குற்றாலத்தில் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் பிரகாஷ்ராஜ் கலந்துகொள்ளவில்லை. இதற்கு காரணம் கேட்டபோது, பிரகாஷ்ராஜ், தில் ராஜு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாராங்கள் தெரிவித்தன. இதையடுத்து ராஜு தயாரிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார். தந்தை வேடத்தில் நடிக்க புதிய நடிகரை தேடிக்கொண்டிருக்கிறது பட குழு. ஏற்கனவே இப்படத்தில் மகேஷ்பாபுவின் அண்ணி வேடத்தில் நடிக்க மறுத்து அனுஷ்கா, த்ரிஷா போன்றவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment