கமல் பட இன்னொரு நாயகியும் வெளியேறினார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனாக்ஷி சின்ஹாவை தொடர்ந்து கமல் படத்திலிருந்து இன்னொரு நாயகியும் வெளியேறினார். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் புதிய படம் 'விஸ்வரூபம்'. இதன் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா தேர்வானார். ஷூட்டிங் தொடங்க தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இஷா ஷெர்வானி நடிக்க  ஒப்பந்தம் ஆனார். தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர்கூறும்போது, 'கமல்சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் வெளியேற வேண்டியதாகிவிட்டது. கமலுடன் நடிப்பது எனது கனவு. அந்த கனவு நனவாகவில்லை.  மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.  மாற்றான் படத்தில் சூர்யாவுடன், டேவிட் என்ற படத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன். இவ்வாறு இஷா ஷெர்வானி கூறினார்.


 

Post a Comment