100 சவரன் நகை, வீட்டை எழுதிக் கேட்டு துன்புறுத்தல் - நடிகை தூக்கில் தொங்கியதன் பின்னணி

|


சென்னை: சின்ன நடிகையோ பெரிய நடிகையோ... கம்ப்யூட்டர் பிஸினஸ் அல்லது சாப்ட்வேர் எஞ்ஜினீயர் என்றால் உடனே கழுத்தை நீட்டிவிடுகிறார்கள்.

நேற்று தூக்கில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் டிவி நடிகை உமா மகேஸ்வரியும்கூட இப்படி கம்ப்யூட்டர் கணவனை கட்டிக் கொண்டுதான் கஷ்டப்பட்டுள்ளார்.

உமா மகேஸ்வரிக்கும் அவரது கணவர் அருணுக்கும் திருமணம் நடந்து ஒரு வருடம் 3 மாதம் ஆகிறது. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

உமா மகேஷ்வரியின் தாயார் கலாவதி வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கிறார். உமா மகேஷ்வரி தாயார் வீட்டில்தான் குழந்தை பெற்றுக்கொண்டார். கணவர் வீட்டுக்கு வரவில்லை.

உடம்பு சரியாகும்வரை அம்மா வீட்டில் இருக்கிறேன் என்று கூறிய உமா மகேஷ்வரியை வரவழைக்க, விபத்து என்று பொய் கூறி எஸ்எம்எஸ் அனுப்பியதால், பதறி துடித்தபடி அருணைப் பார்க்க வந்தார் உமா.

ஏன் இப்படி? பொய்யான தகவலை அனுப்பினீர்கள் என்று உமா மகேஷ்வரி, தனது கணவரிடம் கோபமாக கேட்டார். உன்னை இங்கு வரவழைக்கவே, இவ்வாறு தகவல் அனுப்பினேன் என்று அருண் சாதாரணமாக தெரிவித்தார்.

ஆனால் உமாவால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சத்தம் போட்டார். பிரசவம் முடிந்து உடல்நிலை தேறாமலிருந்த உமா மகேஷ்வரியை அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார் அருண். அதனால்தான் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் உமா.

வரதட்சனைக் கொடுமை

இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையில் உமா மகேஷ்வரியின் தாயார் கலாவதி போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "எனது மகள் தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி பரிசு பெற்று இருக்கிறார்.

டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இன்டர்நெட் மூலம் வரன்பார்த்து பேசி, எனது மகளுக்கு, அருணை திருமணம் செய்துவைத்தோம். திருமணத்தின்போது 40 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தோம்.

ஆனால் மேலும் 100 சவரன் நகைகளும், எனது பெயரில் உள்ள வீட்டையும் எழுதிக்கேட்டு எனது மகளை அருண் அடித்து, துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் எனது மகள் பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவளை உடனடியாக தனது வீட்டுக்கு வரவேண்டும் என்று அருண் வற்புறுத்தி வந்தார். குழந்தை பிறந்து 5 மாதம் ஆனதும் வருகிறேன் என்று எனது மகள் சொல்லிவிட்டாள். இதற்கிடையில் விபத்தில் சிக்கிவிட்டதாக பொய்யான தகவலை சொல்லி எனது மகளை அவரது வீட்டுக்கு அருண் வரவழைத்தார். அவளை அடித்து கொடுமை படுத்தினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்பி எண்ணும் அருண்

இந்த புகார் மனு அடிப்படையில் வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
 

Post a Comment