இயக்குனரை 1 வருடம் காக்க வைத்த பிரகாஷ்ராஜ்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கால்ஷீட் வேண்டுமென்றால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று இயக்குனரிடம் நிபந்தனை போட்டார் பிரகாஷ்ராஜ். பிரியமுடன் இரணியன் ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கும் படம் 'துள்ளி விளையாடு. இது பற்றி அவர் கூறியதாவது: முக்கோண காதல் கதை நிறைய வந்திருக்கிறது. முக்கோண துரத்தல் கதையாக இந்த ஸ்கிரிப்ட் உருவாகி உள்ளது. எந்த தகுதியுமே இல்லாத 3 பேர் தகுதியை மீறி உயர்ந்த இடத்துக்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை. தகுதி மீறிய அந்தஸ்து பெற்றவர்களாக யுவராஜ் சூரி சென்ராயன்  நடிக்கின்றனர். காமெடி வில்லனாக பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக ஜெயப்பிரகாஷ் நடிக்கின்றனர்.

ஹீரோயின் தீப்தி. எங்கேயும் எப்போதும் படத்தில் 3வது ஹீரோயினாக நடித்தவர் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் ஜெய்சல்மரில் நடந்தது. பாலைவனப்பகுதியில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் ஸ்கிரிப்ட் ரெடியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. மற்ற நட்சத்திரங்கள் ஒப்பந்தம் ஆன நிலையில் பிரகாஷ்ராஜ் நடித்தால்தான் குறிப்பிட்ட காமெடி வில்லன் வேடம் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது ஒருவருடம் பிஸியாக இருப்பதாக கூறினார். அவர் கால்ஷீட் பெறுவதற்காகவே ஒரு வருடம் காத்திருந்து ஷூட்டிங்கை தொடங்கினோம். இன்றைக்கு படம் முடிவடைந்திருக்கிறது. இவ்வாறு வின்சென்ட் செல்வா கூறினார்.


 

Post a Comment