கோலிவுட்டில் இப்போது புதிய ட்ரெண்ட், இளம் ஹீரோக்கள் அல்லது நடிகைகள் தருகிற பார்ட்டிகள்தான்.
படப்பிடிப்பு இல்லாமல் சும்மா இருந்ததாலோ என்னமோ, முறைவைத்து ஒவ்வொரு நாள் ஒருவர் வீட்டில், பண்ணை இல்லங்களில் அல்லது நட்சத்திர விடுதிகளில் பார்ட்டி கொடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் குஷ்பு, ஒரு நாள் ஆர்யா, ஒரு நாள் பிரபு தேவா... என வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோடம்பாக்கத்தில் விருந்துகள், ஆட்டம் பாட்டம் என கழிகிறது திரையுலகினருக்கு.
இந்த விருந்துகளில் பெரும்பாலும் ஒரே செட் நடிகர்கள்தான் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்கூட பிரபு தேவா தன் வீட்டில் விடிய விடிய பார்ட்டி கொடுத்தார். த்ரிஷா, குஷ்பு, ஜெயம் ரவி, சுந்தர் சி உள்பட ஏராளமானோர் அதில் பங்கேற்று அதிகாலை வரை ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
இந்த வாரம் நடிகர் ஜெயம் ரவி தனது வீட்டில் நடிகர், நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார். தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே இந்த விருந்துக்கு அழைத்திருந்தார்.
நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சிபிராஜ், குஷ்பு, இயக்குனர் வெங்கட் பிரபு என பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர். அனைவருக்கும் வித விதமான உணவுகள் பரிமாறப்பட்டன. ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரத்யேகமாக தயார் செய்த உணவு வகைகளை பரிமாறி அசத்தினர்.
இந்த வகை விருந்துகள், கேளிக்கைகள் மகிழ்ச்சியைத் தருவதாகவும், நல்ல புரிதலை உண்டாக்க உதவுவதாகவும் கூறுகிறார்கள் விருந்தில் பங்கேற்ற நடிகர் நடிகைகள்.
இப்டி ஏழுநாள் செய்யணும் (வாரத்துக்கு)!