சிவகார்த்திகேயன், ஆத்மியா ஜோடியாக நடிக்கும் படம், 'மனம் கொத்திப் பறவை'. ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.எழில், அம்பேத்குமார், ஏ.ரஞ்சீவ் மேனன் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தை இயக்கும் எஸ்.எழில் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகார்த்திகேயன் தன்னை முழுமையான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ளும் படமாக இது அமையும். ஒவ்வொரு காட்சியையும் புதுமையாக அமைத்திருக்கிறேன். படம் தொடங்கியது முதல் முடியும்வரை, காமெடி கலந்த காதல் திருவிழாவாக இருக்கும். எனது படங்களில் மென்மையான காதல் வலுவாக இருக்கும். இதில் சிவகார்த்திகேயனுக்கும், ஆத்மியாவுக்குமான காதல் இனிமையாகவும், இயல்பாகவும் இருக்கும். ஏற்கனவே நான் எழுதிய ஸ்கிரிப்ட் இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், நடிகர்களுக்கு ஏற்ப அத்தனையும் மாறிவிடும். அது சிறப்பாகவே இருந்ததால், அவர்களை நடிக்கவிட்டு படமாக்கினேன். எடிட்டிங்கில் பார்த்தபோது, எதிர்பார்த்ததை விட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. ஷூட்டிங் முடிந்து விட்டது. விரைவில் ரிலீசாகிறது. இவ்வாறு எழில் கூறினார். பேட்டியின்போது சிவகார்த்திகேயன், ஆத்மியா, சிங்கம்புலி, சூரி, கிஷோர், ஸ்ரீநாத், சாம்ஸ், அம்பேத்குமார், இமான், யுகபாரதி உடனிருந்தனர்.
Post a Comment