தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: சம்பளத்தை நான் உயர்த்திவிட்டதாக சொல்லும் தகவல்களில் உண்மையில்லை. நியாயமான சம்பளத்தைதான் பெறுகிறேன். நான் எவ்வளவு வாங்குகிறேன் என்பதை இன்டஸ்ட்ரியில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வளவு வேண்டும் என்று டிமான்ட் பண்ணவும் இல்லை. இந்தி படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் தமிழ், தெலுங்கில் பிசியாக இருப்பதால் இந்தியில் நடிக்க இப்போது முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தமன்னா கூறினார்.
Post a Comment