'விஸ்வரூபத்தில் கிராபிக்ஸ் பேசப்படும்'

|

Why Does Viswaroopam Get Delayed   
விஸ்வரூபம் படத்தில் கஷ்டப்பட்டு அருமையாக கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் தெனாலி, ஆளவந்தான், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களில் பணியாற்றியவர் மதுசூதனன். அவர் தற்போது விஸ்வரூபம் படத்தின் மூலம் 4வது முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். விஸ்வரூபம் படத்தில் கிராபிக்ஸ் காட்சி மேற்பார்வையாளராக உள்ளார். அவர் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியவர்.

இந்நிலையில் அவர் விஸ்வரூபம் குறித்து கூறுகையில்,

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவுக்கு உருவாக்கியுள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் கதையையோ, இயல்பையோ பாதிக்காத அளவில் அமைந்துள்ளன.

இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு பணிபுரிந்துள்ளோம். வேலை அதிகம் இருந்ததாலேயே படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

ஸ்பைடர்மேன் படத்தில் பணியாற்றியதால் என்னால் தசாவதாரம் படத்தில் பணியாற்ற முடியவில்லை. அந்த குறை விஸ்வரூபம் மூலம் தீர்ந்தது. இது நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்றார்.
Close
 
 

Post a Comment