ஸ்ரீதேவியைப் பிடிக்கும்... ஆனால் அவரைப் போல திருமணமானவரை மணக்க இஷ்டமில்லை! - சமந்தா

|

Samantha Dislikes Sri Devi Personal Life
எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். ஆனால் அவரைப் போல ஏற்கெனவே திருமணமான ஒருவரை மணப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா.

தமிழில் பெரிய வெற்றிப் படம் எதிலும் தனி கதாநாயகியாக நடிக்காமலேயே முன்னணி நாயகியாக உள்ளவர் சமந்தா.

நீதானே என் பொன் வசந்தம், கடல் என எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

தனது இந்த வளர்ச்சி குறித்து சமந்தா கூறுகையில், "எனக்கு பழைய நடிகை ஸ்ரீதேவியைப் பிடிக்கும். சினிமாவில் அவரை முன் மாதிரியாகக் கொண்டு நடிக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென் இந்திய மொழி படங்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வளர்ந்தார். இந்தி திரையுலகுக்கு போய் அங்கேயும் தன்னை திரையுலக மகாராணியாக நிரூபித்தார். என் நடிப்புக்கு அவர்தான் ரோல்மாடல்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நான் ஸ்ரீதேவியை போல் இப்போது இந்திக்கு போய் உள்ளேன். எல்லா விஷயங்களிலும் ஸ்ரீதேவியைப் பின் பற்றும் நான் திருமண விஷயத்தில் மட்டும் அவரைப் பின்பற்ற மாட்டேன். ஸ்ரீதேவியை போல் ஏற்கனவே திருமணமான ஒருவரை மணக்கமாட்டேன்," என்றார்.
Close
 
 

Post a Comment