சர்வதேச மொழிகளில் ரீமேக்காகும் முப்பொழுதும் உன் கற்பனைகள்

|

Muppozhudum Un Karpanaigal International Languages   
கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்ரெட் குமாரின் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடிந்து வருகிறது. இதில் எல்ரெட் குமார் தயாரித்து இயக்கிய முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் கடந்த 22ம் தேதி திரையிடப்பட்டது. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, அமலா பால் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸாகி 100 நாட்களை தொடவிருக்கும் நிலையில் சர்வதேச அரங்கில் திரையிடப்பட்டுள்ளது படத்திற்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

படத்தை இயக்கிய எல்ரெட் குமார் திரைப்பட விழாவில் சர்வதேச இயக்குனர்களுடன் சிவப்பு கம்பளத்தில் ஆனந்த கண்ணீரோடு நடந்துள்ளார். இந்த படத்தைப் பார்த்தவர்கள் ரீமேக் உரிமையைப் பெற போட்டா போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த எக்கோ என்ற நிறுவனம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. இந்த படத்தை கொரியா மற்றும் ஐரோப்பா பகுதியில் வெளியிட அந்நாட்டு இயக்குனர்களும் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஆக முப்பொழுதும் உன் கற்பனைகள் பல்வேறு மொழிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
Close
 
 

Post a Comment