காதலுடன் நடிப்பதற்காக கை கோர்க்கிறார் மீரா ஜாஸ்மின்!

|

Meera Jasmine Act With Lover Rajesh   
காதலில் கசிந்துருகி, நடிபைக் கூட சுருக்கிக் கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இப்போது தனது காதலருடன் இணைந்து ஒருதெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம். அத்தோடு நடிப்புக்குக் குட்பை சொல்லி விட்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகப் போவதாக கூறப்படுகிறது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்த இவர் மலையாளப் படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.

எல்லோரையும் தாக்கும் காதல் நோய் இவரையும் தாக்கவே படங்களைக் குறைத்துக் கொண்டு மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி ராஜேஸுடன் தீவிரக் காதலில் மூழ்கினார்.

காதல் வாழ்க்கை சுகமாகிப் போக சினிமாவைக் குறைத்துக் கொண்டார். சமீப காலமாக சுத்தமாக படங்களே இல்லாமல் போனது. இந்த நிலையில் மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம் மீரா. அது தமிழில் இல்லை, தெலுங்கில். இப்படத்தில் அவருடன் இணைந்து ஜோடி போடப் போவது ராஜேஷாம்.

விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப் போகிறதாம். படம் வெளியான பின்னர் சினிமாவுக்கு குட் பை சொல்லி விட்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனராம் மீராவும், ராஜேஷும்.
Close
 
 

Post a Comment