சகுனியால் தள்ளிப்போன பில்லா 2

|

Billa 2 Postponed June 29   

வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தியின் சகுனியும் ஜூன் 22ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டில் எந்த படத்தின் தேதி மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது பில்லா 2 அறிவித்தபடி 22ம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும், ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா 2 பெரிய பட்ஜெட்டில் அஜீத் குமாரை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் வியாபாரம் அடியாகும் என்று தயாரிப்பு வட்டம் கருதியுள்ளது. இதையடுத்து தான் பில்லா 2வின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பில்லா 2 அவருக்கு பிறந்தநாள் பரிசு போல் அமைந்துள்ளது என்று இரு நடிகர்களின் ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் அஜீத்தின் படம் தள்ளிப்போயுள்ளது.

 

Post a Comment