மீண்டும் பெண் குழந்தை - சந்தோஷத்தில் வெங்கட் பிரபு

|

Venkat Prabhu Blessed With Female Child

தனக்கு இரண்டாவது மகள் பிறந்துள்ள சந்தோஷத்தை அனைவருடனும் சந்தோஷமாகப் பகிர்ந்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு - ராஜலட்சுமி (நடன ஆசிரியை கேஜே சரசா மகள்) தம்பதிக்கு ஏற்கெனவே ஷிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

மீண்டும் கர்ப்பமான ராஜலட்சுமிக்கு நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட வெங்கட் பிரபு, "மீண்டும் எனக்கு மகள் பிறந்துள்ளாள். அம்மாவும் குழந்தையும் நலமாக உள்ளனர். உங்கள் வாழ்த்துகள் - பிரார்த்தனைகளுக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இப்போது பிரியாணி என்ற படத்தை இயக்குகிறார். இதில் கார்த்தி - பிரேம்ஜி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

 

Post a Comment