'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஷங்கர் படத்தை தேர்வு செய்த சமந்தா!!

|

Why Samantha Chooses Shankar Film   

ஒரே நேரத்தில் ஷங்கர், மணிரத்னம் என இரு பெரிய இயக்குநர்களிடமிருந்து வாய்ப்பு. இரண்டிலுமே நடிக்க ஆசை இருந்ததால் ஒப்புக் கொண்ட சமந்தாவுக்கு, இருவருமே தன் மொத்த கால்ஷீட்டையும் வருடக் கணக்கில் குத்தகைக்கு கேட்க, திகைத்துப் போனார்.

சரி, இருவரில் யார் படம் பெஸ்ட்...? என்ற கேள்வி எழ, வீட்டில் உட்கார்ந்து இங்கி பிங்கி பாங்கி... போட்டுப் பார்க்க, அதில் ஷங்கர் படம் ஓகே என்று வர, முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு சில தினங்கள் நடித்த பிறகு, என்னால் டேட்ஸ் தர முடியல சார் என மணிரத்னத்திடம் சொல்லிக் கொண்டு வந்துவிட்டாராம்.

மணிரத்னம் படத்தை விட, ஷங்கர் படத்தில் நடிப்பதுதான் தன் கேரியரை உச்சத்தில் நிறுத்தும் என்பது சமந்தாவுக்கு நன்கு புரிந்துவிட்டதும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாம். தனது மொத்த கால்ஷீட்டையும் இப்போது ஷங்கர் படத்துக்கே கொடுத்துவிட்டாராம்.

ஆனால், மணிரத்னம் தரப்போ, ஹீரோவை விட சமந்தா முதிர்ச்சியடைந்த தோற்றத்தில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக செய்தி பரப்ப கடுப்பிலிருக்கிறார் அம்மணி.

'எது எனக்கு நல்லது என்று பட்டதோ அந்த முடிவை எடுத்தேன். அதற்காக என் வயது, தோற்றம் குறித்தெல்லாம் பேசி டேமேஜ் பண்ணுவது டூ மச்,' என பொங்குகிறார் சமந்தா.

 

Post a Comment