பெரிய கதாநாயகிகள் குத்துப்பாட்டுக்கு நடனமாடாதீர்கள் என்று முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். விழாவில் அவர் மேலும் கூறியதாவது,
திரைப்படங்களில் பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஏற்கனவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ள பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதை ஆடுவதற்கு எவ்வளவோ நடிகைகள் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் குத்தாட்டத்துக்கு வேறு அர்த்தம் இருந்தது. இப்போது அது முற்றிலும் மாறிவிட்டது. வெவ்வேறு பெயர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ ஹீரோயின்கள் நடனம் ஆடுகிறார்கள். இதில் கைதேர்ந்தவர்கள் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி. அவர்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நன்றாக நடனம் ஆடுகிறார். வித்யாபாலனும் ஓரளவுக்கு பரவாயில்லை. மற்ற எந்த நடிகையையும் இந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
முன்னாள் கனவுக்கன்னி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
Post a Comment