மலையாள படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் சனா கான். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் ஆனது. இதையடுத்து கன்னடத்தில் அவரது வாழ்க்கை படமாக்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் ஆக நடிக்கிறார். இந்நிலையில் மலையாளத்திலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, 'புரொஃபைல்' என்ற பெயரில் படமாகிறது. இதில் சனாகான், சில்க்காக நடிக்கிறார். இவர், தமிழில் 'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு இந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு' உட்பட சில படங்களில் நடித்தவர். மலையாளத்தில் சில்க்கை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆண்டனி ஈஸ்ட்மேன் கதை எழுதுகிறார். அனில் இயக்குகிறார். நிஷான், பாபு ராஜ், சுரேஷ் கிருஷ்ணா, ராஜஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர். ''டர்ட்டி பிக்சர் படத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. ஆண்டனி, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி பழகியவர். அவருக்கு சில்க்கை பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவர் கதை எழுதுகிறார். இது உண்மை கதையாக இருக்கும். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது'' என்று இயக்குனர் அனில் தெரிவித்தார்.
Post a Comment