சன் டிவியின் இரவு நேரத்தில் காமெடி டைம் நிகழ்ச்சியைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது என்றால் அது அர்ச்சனாவின் கலகலப்பான பேச்சிற்காகத்தான். இளமை புதுமையில் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். திருமணமானவுடன் சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா? என்று தேடியதில் தொலைபேசியில் சிக்கினார். அவரிடம் ஒரு மினி பேட்டி.
இளமை புதுமை, காமெடி டைம் என்று கலக்கலாக போய்க் கொண்டிருந்த நீங்கள் திடீரென சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டீர்களே?
சன் தொலைக்காட்சியில் நாங்கள் வேலை பார்த்த போது ‘இளமை புதுமை', ‘காமெடி டைம்' பண்ணின காலம் எங்களுக்கு பொற்காலம். ஜாலியா போய்ட்டு இருந்தது. திருமண வாழ்க்கையும் இப்போ சந்தோசமா போயிட்டு இருக்கு. கணவர் வினீத் கொச்சின், கொல்கத்தான்னு வேலை பார்த்துட்டு இப்பதான் சென்னையில செட்டில் ஆகியிருக்கோம். ‘உத்சவ்' ங்கிற பேர்ல ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்திட்டு இருக்கேன். குட்டிப்பொண்ணு சாரா யு.கே.ஜி படிக்கிறா.
ரோபோ ஷங்கர், டிரம்ஸ் பிளேயர் விஷால் எல்லாம் எங்களோட நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கிட்டவங்கதான். அவங்க எல்லோரும் இன்னைக்கு பிரபலமானவங்களா வந்திட்டு இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. குழந்தை இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளர்ந்த பிறகு மறுபடியும் சேனல்ல இன்னொரு ரவுண்டு வரனும்னு ஆசை இருக்கு பார்க்கலாம் என்று கூறி மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.
Post a Comment