சென்னை: நடிகைகள் திருமணமான பிறகும், நடிப்பைத் தொடர்வது தவறா என்று கேட்டுள்ளார் நடிகை மம்தா.
நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த ஆண்டு தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
தமிழில் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து அவரிடம் பேசியபோது, "திருமணத்துக்குப் பின் சினிமாவில் தொடரக் கூடாது என நடிகைகளுக்கு மட்டும் என்ன சட்டமா.. ஆண்கள் நடிக்கத்தானே செய்கிறார்கள். திருமணம் ஆன பிறகும் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இனி ஆண்டுக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.
Post a Comment