வீட்டுக்கு அருகே வெடிகுண்டு: மும்பையை காலிசெய்யும் ரிச்சா?

|

Richa Shift Her Base From Mumbai   

நடிகை ரிச்சா மும்பையை விட்டுவிட்டு சென்னை அல்லது ஹைதராபாத்தில் குடியேறிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் அங்கு கிடைத்த பொருள் வெடிகுண்டு இல்லை என்று தெரிய வந்தது. குண்டு இருந்ததாகக் கூறப்பட்ட மாலுக்கு அருகில் தான் மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபத்யாயவின் வீடு உள்ளது.

வெடிகுண்டு செய்தி கேட்டு ரிச்சா ஆடிப் போய்விட்டாராம். இது என்னடா இந்த மும்பையில எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது வெடிகுண்டு அச்சுறுத்தலாக உள்ளதே என்று அவர் அஞ்சுகிறாராம். இதனால் பேசாமல் ஜாகையை சென்னை அல்லது ஹைதராபாத்திற்கு மாற்றிவிட்டால் என்ன என்று தீவிர யோசனையில் உள்ளார்.

தற்போது ரிச்சா கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தில் நடிக்கிறார். இது தவிர அவர் கையில் 2 தெலுங்கு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment