கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சத்யமேவ ஜெயதே சீசன் 2 மூலம் மீண்டும் மக்களை சந்திக்க வருவேன் என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது சத்யமேவ ஜெயதே. இந்தி நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி வெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இல்லாமல் இன்றைய சமூகத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது அமைந்தது. பெண் சிசுக்கொலை தொடங்கி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை, வரதட்சணை கொடுமை, மருத்துவ முறைகேடுகள், ஆடம்பர திருமணங்கள், இன்றைய சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அவலங்கள் போன்ற தலைப்புகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதி கடந்த மாதத்துடன் முடிவடைந்து விட்டது.
இதனிடையே எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், தூம் 3, பிகே போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கின்றேன். இந்த படங்கள் முடிந்த உடன் மீண்டும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
சத்யமேவ ஜெயதே சீசன் ஒன்றிர்க்காக அமீர்கான் டீம் இரண்டு ஆண்டுகளாக நாடுமுழுவதும் சுற்றித்திருந்து தகவல்களை சேகரித்தனர். இது 13 பகுதிகளாக ஒளிபரப்பானது. மீண்டும் சீசன் 2 விற்கான பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment