6 பட பாடல் ஷூட்டிங்... பாங்காக்கில் ஷாம் - பூனம் கவுர்

|

Shaam Goes Bangkok 6

தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்காக தன் உடலை இந்த அளவு வருத்திக் கொண்ட நடிகரைப் பார்த்திருக்க முடியாது. அவர் ஷாம். படம் 6.

படத்தின் தலைப்பு மட்டுமல்ல.. கதையே ரொம்ப வித்தியாசமானது, புதுமையானது என்பதால், அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் ஷாம்.

தெலுங்கு, தமிழில் வந்த வேறு வாய்ப்புகளையெல்லாம் கூட உதறிவிட்டு, இந்தப் படத்துக்காக மட்டுமே மெனக்கெட்டார். கிட்டத்தட்ட 20 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்தார்.

ஹாலிவுட்டில் இதற்கு முன் பேட்மேன், மெஷினிஸ்ட் படங்களின் நாயகன் கிறிஸ்டியன் பாலேதான் இந்த அளவு கடுமையாகப் பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைத்தவர். கிட்டத்தட்ட அவரது சாதனையை நெருங்கும் அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் ஷாம் என்றால் மிகையல்ல. சொல்லப் போனால் அவரை முன்மாதிரியாக வைத்துதான் இந்த பயிற்சிகளில் இறங்கினாராம்.

தன் முகத்தை தானே அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிக் கொண்டார். கண்களின் கீழிமைகளை வீங்க வைத்து, மருத்துவர்கள் அதிர்ந்து போய் திட்டுமளவுக்கு இறங்கினார். அத்தனையும், படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக.

அவரது முயற்சியைப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஷாம் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது படம். கிட்டத்தட்டை அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் சேர்த்தால் படம் வணிகரீதியாகவும் சிறப்பாக இருக்கும் என்பதால், இப்போது அந்தப் பாடலை ஷூட் செய்ய தாய்லாந்து தலைநகர் பாங்காக் போயி்ருக்கிறார்கள் ஹீரோ ஷாமும் இயக்குநர் விஇசட் துரையும்.

ஹீரோயின் பூனம் கவுட் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு மதி. இசையை ஸ்ரீகாந்த் தேவாவும், எடிட்டிங்கை ஆண்டனியும் கவனிக்கிறார்கள்.

 

Post a Comment