ஜெயா டிவியில் விசுவின் பெரியவர்!

|

Visu Directs New Serial Periyavar

சின்னத்திரையில் முதன்முறையாக பெரியவர் என்ற நெடுந்தொடரை இயக்க உள்ளார் நடிகரும் இயக்குநருமான விசு.

மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியவர் விசு. சினிமாவில் இருந்து சின்னத்திரையில் அரட்டை அரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியை நடத்தி பிரபலமடைந்தார். சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு சென்ற பின்னர் மக்கள் அரங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரை சீரியல் பக்கம் போகாத விசு தற்போது முதன் முறையாக ஜெயா டிவிக்காக சீரியலை இயக்க இருக்கிறாராம். பெரியவர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியல் விரைவில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குநர் பாலச்சந்தரிடம் பணியாற்றி அவர் வழியில் திரைப்படங்களை இயக்கியவர் விசு. தற்போது குருவின் வழியில் தொடரை இயக்க இருக்கிறார். தற்போது பெரியவர் தொடருக்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Post a Comment