லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா செய்யாத சேட்டைகள் இல்லை. லேட்டஸ்டாக அவர் தனது வீட்டில் எடுத்த ஒரு ரகளை வீடியோவை யூடியூபில் ரவுண்டுக்கு விட்டுள்ளார். அந்த வீடியோல் ஆட்டம் பாட்டம் போடும் காகா, தனது மேலாடையைத் துறந்து மார்புகளை வெட்டவெளிச்சமாக்கும் காட்சிகள் உள்ளன.
லேடி காகா பாடுவதைத் தவிர வேறு பல வேலைகளையும் செய்வதில் கில்லாடி. நிர்வாணமாகப் போஸ் கொடுத்துள்ளார். கவர்ச்சிகரமான டிரஸ்ஸுடனும், மேக்கப்புடனும் வலம் வந்துள்ளர். இந்த நிலையில் புதிதாக ஒரு கலக்கல் வீடியோ யூடியூபில் வலம் வருகிறது.
அந்த வீடியோவை தனது வீட்டில் எடுத்துள்ளார் காகா. அதில் கேஷுவலான உடையில் இருக்கும் காகா, டான்ஸ் ஆடுகிறார், பாடுகிறார், சிரிக்கிறார், கூடவே தனது மேலாடையைத் துறந்து மார்புகளையும் பளிச்சென காட்டுகிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தனது தங்கை நதாலி எடுத்ததாகவும் கூறியுள்ளார் காகா.
காகாவின் சேட்டைத்தனங்களைப் பார்த்து அவரது தங்கை நதாலி சிரிப்பதும் வீடியோல் உள்ளது. காகா ஆடும்போது கிச்சனில் இருந்து அவரது அம்மா சிந்தியாவும் வந்து தனது மகளின் சேட்டைகளைப் பார்த்து ரசிக்கிறார்.
Post a Comment