குடிபோதையில் காரோட்டி போலீசாரிடம் சிக்கிய பாலகிருஷ்ணா மகன்

|

Balakrishna S Son Mokshagna Makes

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் தவப் புதல்வன் மோக்ஷாக்னா குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் அருமை மகன் மோக்ஷாக்னாவை மீடியாக்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தார். வெளிநாட்டில் படிக்கும் மோக்ஷாக்னா தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாலகிருஷ்ணா நடிக்கும் ஸ்ரீமன்நாராயணா படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு மகனை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. மேலும் மோக்ஷாக்னா படிப்பை முடித்தவுடன் நிச்சயம் நடிக்க வருவார் என்று உறுதியளித்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் செய்தியாளர்கள் விறு, விறு என்று எழுத, புகைப்படக்காரர்கள் கிளிக், கிளிக் என்று போட்டோ எடுத்துத் தள்ளிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் டாடா சபாரி காரில் ஜுபிளி ஹில்ஸ் சோதனைச்சாவடி வழியாக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண ரெட்டி அந்த காரை நிறுத்தியுள்ளார். மோக்ஷாக்னாவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது உறுதியானது.

இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த மோக்ஷக்னா மீது வழ்ககுப் பதிவு செய்துள்ளனர். எங்கே மீடியா வந்து போட்டோ எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் வேறு காரில் ஏறி பறந்துவிட்டாராம்.

 

Post a Comment