'இருட்டறை'க்கு வராத பிந்து மாதவி!

|

Bindu Madhavi Bunks Soi Shooting   

பெங்களூரில் நடந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் டிமிக்கி அடித்து விட்டாராம் நடிகை பிந்து மாதவி. இதனால் படக் குழுவினர் அப்செட் ஆகி விட்டனராம்.

கழுகு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிந்து மாதவி. அப்படியே சிலுக்கு போலவே இருக்கிறார் என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டதால் பிந்து மாதவிக்கு தன் மீதே காதல் வந்து விட்டதாம். அந்தப் பெருமிதத்துடன் தற்போது நடித்து வரும் பிந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் போய் விட்டனர். ஆனால் பிந்து மாதவியைக் காணோம். அன்று முழுவதும் அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். இதனால் ஷூட்டிங் கேன்சலாகி விட்டதாம்.

என்ன ஏது என்று விசாரித்தபோது அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி புதிதாக வந்த 3 படங்கள் தொடர்பான ஆழமான டிஸ்கஷனில் அவர் இருந்ததால்தான் சட்டம் ஒரு இருட்டறை ஷூட்டிங்குக்கு வர முடியாமல் போனதாக இன்னொரு தகவலும் கிடைத்ததால் படக் குழுவினர் கடும் அப்செட்டாம்.

உண்மை என்னவோ மாதவி ...!

 

Post a Comment