கமல் கையைப் பிடித்து ஹாலிவுட் போகும் சூர்யா

|

Suriya Debut Hollywood

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள சூர்யா அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறராம்.

நடிகர் சூர்யா கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப கெட்டப்பை மாற்றி வரும் கமல் ஹாசன் போன்று சூரியாவும் கதைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வார். அவர் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து நடித்த மாற்றான் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அடுத்ததாக சிங்கம் 2, துப்பறியும் ஆனந்தம் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இத்தனை நாட்களாக கோலிவுட்டை கலக்கிய சூர்யா ஹாலிவுட்டுக்குப் போகிறார். உலக நாயகன் கமல் ஹாசன் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுள்ளாராம். கமல் அழைத்து சூர்யா மறுக்கவா போகிறார்.

அப்படி என்றால் கமல், சூர்யா ஆகிய இருவரையும் ஒன்றாகவே ஹாலிவுட் படத்தில் பார்க்கலாம்.

 

Post a Comment