அமெரிக்க பாடகியான லேடி காகா அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தியபடி இருப்பவர். இப்போது புதிதாக யுனிகார்ன் போஸ் கொடுத்து பயமுறுத்தியுள்ளார்.
இந்த அதிரடி புகைப்படங்களை டிவிட்டரிலும் போட்டுள்ளார். இதில் ஒரு படத்தில், நான்கு கால்கள் கொண்ட யுனிகார்ன் நிற்பது போல லேடி காகா போஸ் கொடுத்துள்ளார். மேலாடை அணியவில்லை. வெற்று மார்புகளுடன் காட்சி தருகிறார். தனது இரு கைகளையும் வைத்து மார்புகளை மறைத்தபடி நிற்கிறார். தலையில் செயற்கைக் கொம்பு வைத்துள்ளார். மிரட்டலான மேக்கப்பில் பிரமிக்க வைக்கிறது லேடி காகாவின் போஸ். உண்மையில் காகாவின் ஒரு ரசிகர்தான் பழைய படத்தை வைத்து இந்த போஸை உருவாக்கி காகாவுக்கும் இதை அனுப்பி வைத்துள்ளார்.
இன்னொரு படத்தில் கருப்பு நிற தோல் உடையில் காணப்படுகிறார் காகா.
இதேபோல இன்னொரு புகைப்படத்தையும் காகா வெளியிட்டுள்ளார். அதில் அவரது கையில் ஆர்ட்பாப் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அதைக் காட்டியபடி காட்சி தருகிறார். இந்த ஆர்ட்பாப் என்பது அவரது புதிய இசை ஆல்பமாகும்.
Post a Comment