அஜீத்தை வைத்து படம் பண்ணல: லிங்குசாமி

|

I M Not Directing Ajith Lingusamy

இயக்குனர் லிங்குசாமி அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் ஜீ. அஜீத், த்ரிஷா நடித்த இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி. அந்த படத்திற்கு பிறகு அஜீத்தும், லிங்குசாமியும் இணையவே இல்லை. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து அஜீத்தை வைத்து லிங்குசாமி படம் எடுக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது.

சரி, லிங்குசாமியிடமே இதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு, அவர் கூறுகையில்,

ஜி படத்தில் நடித்த காலத்தை விட அஜீத் தற்போது பெரிய ஸ்டாராகிவிட்டார். அவரை நான் இயக்கினால் அவரது ஸ்டார் அந்தஸ்தை மனதில் வைத்தே திரைக்கதை எழுத வேண்டும். அவரை வைத்து நான் படம் பண்ணவில்லை என்றார்.

ஆக இப்போதைக்கு அஜீத்தை வைத்து படம் எடுக்கும் ஐடியா லிங்குசாமிக்கு இல்லை. லிங்குசாமி சூர்யாவை வைத்து படம் எடுப்பதில் பிசியாக இருக்கிறார்.

 

Post a Comment