சமையலோடு சில சங்கதிகள்: அசத்தல் அலுமேலு

|

All All Alamelu Nalini S Cooking

கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நிகழ்ச்சி நகைச்சுவை தொடர் மட்டுமல்ல அதில் சத்தான சமையலும் செய்து காண்பிக்கப்படுகிறது. இந்த தொடரின் நாயகி நளினி செய்யும் சமையல் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருப்பதால் நேயர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சமையல் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து சேனல்களிலும் ஏதாவது ஒரு நேரத்தில் யாராவது சமைத்து, ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நகைச்சுவை தொடரைப்போல இருந்தாலும் எபிசோடின் கடைசிப் பகுதியில் தொடரின் நாயகி நளினி சத்தான சமையல் குறிப்புகளை சொல்வதோடு அவற்றை சமைத்தும் காட்டுகிறார்.

சில தினங்களுக்கு முன் நளினி செய்த இஞ்சிப்புளி ஊறுகாய் செயல்முறையை பார்க்கும் போதே நா ஊறியது. இது தவிர குழி பணியாரம், பால் அப்பம், என தினம் ஒரு வெரைட்டியாக செய்து அசத்துகிறார் நளினி. சமையல் செய்வதற்கு ஒரு கைப்பக்குவம் வேண்டும். அதை சொல்லிக்கொண்டே செய்து காண்பிப்பதற்கு தனி திறமை வேண்டும். நளினிக்கு இந்த இரண்டுமே இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

 

Post a Comment