ஞானவேல் ராஜாவிடம் கும்கி!

|

Gnanavel Raaja Gets Kumki Rights   

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தை வாங்கியது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் இந்த கும்கி. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் அறிமுகமாகும் இந்தப் படத்தின் இசையை சமீபத்தில் வெளியிட்டனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமலும்.

இதனால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. பாடல்கள், ட்ரெயிலர் அனைத்துமே சிறப்பாக வந்திருந்ததால், வியாபார ரீதியாக படம் பெரிதாகப் போகும் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சகோதரர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக பெரும் விலை கொடுத்துள்ளார்களாம்!

ஏற்கெனவே அட்டகத்தி படத்தினை வாங்கி வெளியிட்டு, நல்ல லாபம் பார்த்தது ஸ்டுடியோ கிரீன். அந்த ராசி கும்கியிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் வாங்கியுள்ளனர் போலும்!

 

Post a Comment