பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு செயலையும் ஜாதகம், ஜோசியம் அடிப்படையில்தான் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் தனக்கு பலன் குறித்துச் சொன்ன ஜோசியர் ஒருவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கரீனா கபூர்.
சாயீஃப் அலிகானுடன் காதல், திருமணம் முடிந்துவிட்டது, 250 வது தேனிலவு, என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரீனா கபூர் - சாயீஃப் அலிகான் பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கையில் ஜோசியர் ஒருவர் கரீனாவிற்கு ஜோசியம் சொல்லியிருக்கிறார்.
சாயீஃபை திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கை நரகமாகிவிடும், சிலமாதங்களிலேயே விவாகரத்து பெற்றுவிடுவீர்கள் என்று கூறி கிரகங்களின் அடிப்படையில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று பலன் கூறியிருக்கிறார் அந்த ஜோசியர்.
இதனைப் பார்த்த கரீனா என்ன செய்தார் தெரியுமா? தனக்கு ஜோசியம் சொன்னவரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
பாவம் அந்த ஜோசியர் அவருடைய ஜாதகத்தை சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது.
Post a Comment