கோலாலம்பூர்: தமிழ்த் திரை நடிகைகளில் நன்றாக தமிழ்பேசக் கூடிய நடிகை மோனிகா மலேசியாவில் தமது பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடிய்ருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக பலபடங்களில் நடித்திருந்தாலும் தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட கதாநாயகியாக 916 என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோனிகா.
நன்கு தமிழ் பேசி நடிக்கும் ஆற்றல் உடையவராகையால் உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் கதா நாயகியாக நடித்திருப்பதே இதற்குச் சான்று.
சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை துவக்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அந்த நேரம் பார்த்து அவரது பிறந்த நாள் வந்து விட அதனைத் தெரிந்து கொண்ட அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்த அவரும் சம்மதித்திருக்கிறார். அப்புறமென்ன! மோனிகாவின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் மலேசியா ரசிகர்கள் மற்றும் நண்பர்கள்.
இது குறித்து மோனிகா கூறும் போது "மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள்... அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன்... எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி... இது என் வாழ் நாளில் முக்கியமான பிறந்த நாளாக மாறி விட்டது என்றால் மிகையல்ல..என்றார்.
Post a Comment