எல்லோரையும் திருப்திப்படுத்தறது கஷ்டம்! - சொல்கிறார் ஜீவா

|


I Ve Delivered What Was Required Me Jiiva   
இவரது முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் வசூல் தேறிவிட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து ஜீவா கூறுகையில், "முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி.

ஆனால் சிலர் விமர்சித்துள்ளனர். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், ரசிகர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் பேரை திருப்திப்படுத்தலாம். மிச்சம் உள்ளவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.

அடுத்த படங்களில் என்னை விமர்சிப்பவர்களும் விரும்பும் வகையில் நடிப்பேன். மிஷ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை.

அடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்த நீதானே என் பொன்வசந்தம் படம் ரிலீசாக உள்ளது. இளையராஜா சார் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டன. ரொம்ப நம்பிக்கையாக காத்திருக்கிறேன்,' என்றார்.
 

Post a Comment