பெண்ணாக மாறிய மேட்ரிக்ஸ் இயக்குனர்..!

|

Matrix Director Calls Talks About

வாஷிங்டன்: ஹாலிவுட்டில் பிரபல மேட்ரிக்ஸ் படங்களை இயக்கிய லாரன்ஸ் என்ற லாரி கடந்த 2002ம் ஆண்டு ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறினார். இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றி பேசாதவர் முதல் முறையாக தன்னுடைய உணர்வுகளை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஹாலி்வுட் படங்கள் மேட்ரிக்ஸ் சீரிஸ். அந்தப் படங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதை இயக்கிய லாரி கடந்த 2002ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரை லானா வாசோவ்ஸ்கி என்று வைத்துக் கொண்டார். பெண்ணாக மாறிய அனுபவம் குறித்து இத்தனை ஆண்டுகளாக மௌனம் சாதித்த லானா தற்போது முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் டாம் ஹாங்க்ஸை வைத்து லானா எழுதி, இயக்கியுள்ள கிளவுட் அட்லஸ் விளம்பர நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த நிகழ்சசியில் தான் தான் ஒரு பெண்ணாக மாறியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அவர் பெண்ணாக மாறிய பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியும் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்) இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் பெண்ணாக மாறியது குறித்து உறவினர்களிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் பல நாள் தூக்கமின்றி தவித்துள்ளேன். எனது பெற்றோர், சகோதரர், சகோதரிகளிடம் இது குறித்து எப்படி சொல்வது என்ற பயத்திலேயே பல நாட்கள் தூங்கவில்லை.

ஆனால் நான் ஒரு பெண் என்பதை எனது தாயிடம் தெரிவித்தபோது அவர் எனக்கு ஆதரவாகப் பேசினார். எனது குடும்பத்தார் அளித்த ஆதரவைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கே எனது குடும்பத்தார் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி என்றார்.

 

Post a Comment