காஞ்சிபுரம்: பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன், பேத்திகளின் நிலத்தை மோசடியாக சுருட்டிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மறைந்த நடிகர் பாலையாவும், அவரது மனைவி பத்மாவதியும், காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமம், கற்பகம் நகரில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்களது நிலத்தை பேரன், பேத்திகள் ரவி, உமா, கீதா ஆகியோரது பெயர்களில் எழுதி வைத்திருந்தனர். இந்த நிலத்தின் அளவு 15,000 சதுர அடி ஆகும்.
ஆனால் இந்த நிலத்தை தையூரைச் சேர்ந்த தங்கவேல், கிளாம்பாக்கம் எத்திராஜ், அவரது மனைவி பூங்காவனம், மகன் தினேஷ் குமார் ஆகியோர் மோசடியாக பறித்துக் கொண்டு விட்டனர்.
இந்தத் தகவல் ரவிக்குத் தெரிய வரே அவர் காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில் நில மோசடி விவரம் உறுதியானது. இதையடுத்து நிலத்தை அபகரித்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Post a Comment