ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நந்தி திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. அப்படத்தில் சீதையாக நடித்த நயனதாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான நந்தி விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகராக மகேஷ்பாபு, சிறந்த நடிகையாக நயனதாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இளையராஜாவின் இசையில், நயனதாராவின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன.
தூக்குடு படத்தில் நடித்த மகேஷ்பாபுவுக்கு சிறந்த நடிகர் விருதி கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுக்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது.
Post a Comment