இங்கிலாந்து அழகியால் டென்ஷனான ஹன்சிகா

|

சென்னை: பிரியாணி படத்தில் தன்னை ஹீரோயினாக போடாவிட்டால் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா வெங்கட் பிரபுவிடம் கராராக சொல்லிவிட்டாராம்.

hansika threatens venkat prabhu
Close
 

பிரியாணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் வெங்கட் பிரபு. அவரும் சந்தோஷமாக நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் படத்தில் இங்கிலாந்து கவர்ச்சிக் கன்னியான மாண்டி தாக்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காத்து வாக்கில் ஹன்சிகா காதுகளுக்கு சென்றது.

அவ்வளவு தான் அமுல் பேபி மாதிரி இருக்கும் ஹன்சிகா கோபத்தில் கொதித்துவிட்டாராம். நேராக வெங்கட் பிரபுவிடம் சென்று படத்தில் என்னை ஹீரோயினாகப் போட்டால் மட்டுமே நடிப்பேன். இல்லை என்றால் ஆளை விடுங்க என்று கராராகக் கூறிவிட்டாராம். இல்லம்மா, மாண்டியை கவர்ச்சிக்காக மட்டும் தான் படத்தில் எடுத்துள்ளேன். நீங்க தான் ஹீரோயின். நான் சொல்வதை நம்புங்க என்று வெங்கட் கூறிய பிறகே சாந்தம் அடைந்தாராம் ஹன்சி.

இந்த புள்ளைக்கு இவ்வளவு கோபம் வருமா என்று யோசிக்கிறீர்களா? ஹன்சிகா மட்டுமல்ல வேறு சில ஹீரோயின்களும் தங்கள் படத்தில் தங்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பையும் குறை சொல்ல முடியாதே...

 

Post a Comment