சென்னை: துப்பாக்கி பட வெற்றியைக் கொண்டாட நடிகர் விஜய் மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் முகத்தில் சற்றே அதிக மினுமினுப்பு தெரிகிறது. காரணம் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி வெற்றி பெற்றுள்ளது தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் குமார் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர். படம் வெற்றி பெற்றதையடுத்து விஜய் கொடுத்த பார்ட்டியில் விக்ரம், முருகதாஸ், படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கியில் மட்டுமில்லை பார்ட்டியிலயும் கலக்கிட்டீங்க விஜய் என்று வந்தவர்கள் பாராட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் துப்பாக்கி வெற்றியைக் கொண்டாட மீண்டும் ஒரு பார்ட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இந்த பார்ட்டிக்கு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினரை அழைக்கவிருக்கிறார்.
துப்பாக்கி வெற்றியை விஜய் ரசிகர்களும் அவர்கள் பாணியில் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
Post a Comment